போடிமெட்டு மலைப்பாதையில் ஜீப்கள் மோதல் 4 பேர் படுகாயம்


போடிமெட்டு மலைப்பாதையில் ஜீப்கள் மோதல் 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Aug 2021 10:47 PM IST (Updated: 21 Aug 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

போடிமெட்டு மலைப்பாதையில் ஜீப்கள் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


போடி:
கேரள மாநிலம் சூரியநெல்லியை சேர்ந்தவர் தம்பிதுரை(வயது 39). இவர் போடியில் இருந்து ஜீப்பில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு போடிமெட்டு மலைப்பாதை வழியாக சென்று கொண்டு இருந்தார். வழியில் புலியூத்து மேல்மலை பாதையில் வளைவில் ஜீப்பை திருப்பினார். அப்போது அந்த ஜீப் மீது கேரளாவில் இருந்து தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு ஜீப் வேகமாக  மோதியது.
இந்த விபத்தில் தம்பிதுரை, மற்றொரு ஜீப்பில் வந்த தோட்டத்தொழிலாளர்கள் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த பொம்மியம்மாள் (60), போடி மல்லிங்காபுரத்தை சேர்ந்த அருள்சித்ரா (45), பார்வதி (45) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இதையடுத்து காயமடைந்தவர்களை அங்கு வந்த மற்ற தோட்டத்தொழிலாளர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தம்பிதுரை கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு ஜீப் டிரைவர் ராஜாராம் மீது போடி குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story