குழியில் விழுந்து பள்ளி மாணவன் சாவு
உடுமலை அருகே தென்னை நார் தொழிற்சாலையிலுள்ள குழியில் விழுந்து பள்ளி மாணவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போடிப்பட்டி
உடுமலை அருகே தென்னை நார்த்தொழிற்சாலையிலுள்ள குழியில் விழுந்து பள்ளி மாணவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி விடுமுறை
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடுமலையையடுத்த குரல்குட்டை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருடைய மகன் கேசவன் (வயது 14). இவன் அருகிலுள்ள மலையாண்டிப்பட்டினம் அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
கொரோனா தொற்றின் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனால் கேசவன் அருகிலுள்ள தென்னை நார்க்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற கேசவன் அங்குள்ள நார்க்கட்டி குழியில் விழுந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனால் கேசவனின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு கேசவன் இறந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து உடுமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவன் கேசவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசில் புகார்
இதையடுத்து மாணவனின் தந்தை போலீசில் புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் பாதுகாப்பற்ற முறையில் பணி செய்ய அனுமதித்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் தென்னை நார்த் தொழிற்சாலையின் உரிமையாளர் கந்தர்மணி, சூப்பர்வைசர் சிவக்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story