பயோமெட்ரிக் முறையில் கைரேகைப் பதிவு செய்வதில் சிக்கல்


பயோமெட்ரிக் முறையில் கைரேகைப் பதிவு செய்வதில் சிக்கல்
x
தினத்தந்தி 21 Aug 2021 11:02 PM IST (Updated: 21 Aug 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

போடிப்பட்டி
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.
இணைய வேகம்
ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை வாங்கும் வகையில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது.இந்த முறையின்படி ரேஷன் அட்டை மட்டுமல்லாமல் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர் ஒருவரின் கைரேகை பதிவு செய்யப்பட்டால் மட்டுமே பொருட்களைப் பெற முடியும். இந்தநிலையில் ஒருசில கிராமப்பகுதிகளில் இணைய வேகம் குறைவாக இருப்பதால் ஒவ்வொரு பதிவிற்கும் நீண்ட நேரம் பிடிப்பதாகவும், இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் அடிக்கடி சர்வர் ஏற்படும் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியாமல் பலமுறை அலைக்கழிக்கப்படும் நிலையும் அடிக்கடி ஏற்படுகிறது. இந்தநிலையில் ஒரே எந்திரத்தில் அனைவரும் கைரேகை பதிவு செய்யும்போது கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் பயோ மெட்ரிக் முறை நிறுத்தப்பட்டு ரேஷன் கார்டு கொண்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் பொருட்கள் வழங்கப்பட்டது.இந்தநிலையில் தொற்று பரவல் குறைந்ததால் கைரேகைப்பதிவு நடைமுறை கடந்த மாதம் முதல் மீண்டும் அமலுக்கு வந்தது.
அலைக்கழிப்பு
இந்தநிலையில் உடுமலையையடுத்த சுண்டக்காம்பாளையம் பகுதியில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க முடியாமல் பலரும் திரும்பிச் செல்லும் நிலை அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஒருசில குடும்பத்தினருக்கு யாருடைய கைரேகையை பதிவு செய்தாலும் பொருட்கள் வாங்க முடிவதில்லை. தினசரி 10 பேர் வரை இதுபோல பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பல்வேறு வேலைகளுக்குச் செல்பவர்கள் விடுமுறை எடுத்துவிட்டு பொருட்களை வாங்க மீண்டும் மீண்டும் வரும் நிலை உள்ளது. எனவே கைரேகை பதிவு செய்ய முடியாவிட்டாலும் பொருட்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தி மூலம் பொருட்களை வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பகுதியில் அதிக அளவில் வெளியூர்களுக்குச்சென்று சிலமாதங்கள் தங்கியிருந்து வெல்லம் காய்ச்சும் பணியில் ஈடுபடும் குடும்பங்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பொருட்களை வாங்க முடியாமல் ரேஷன் கார்டு ரத்தாகும் நிலை ஏற்படுகிறது.எனவே இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர். 

Next Story