19 தாசில்தார்கள் இடமாற்றம்


19 தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 21 Aug 2021 11:09 PM IST (Updated: 21 Aug 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

19 தாசில்தார்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

சிவகங்கை,

19 தாசில்தார்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருப்பத்தூர்

தேவகோட்டையில் தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாரராக பணிபுரிந்த வெங்கடேஷ் திருப்பத்தூர் தாசில்தாரராக மாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த ஜெயந்தி காளையார்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.
சிவகங்கையில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக பணிபுரிந்த கயல்செல்வி சிங்கம்புணரி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த திருநாவுக்கரசு சிவகங்கை குடிமைப்பொருள் தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.

சிவகங்கை

சிவகங்கை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாரராக பணிபுரிந்த காசி சிவகங்கையில் வருவாய் பின்தொடர் பணி தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரிந்த சாந்தி மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். சிவகங்கையில் பேரிடர் மேலாண்மை தாசில்தாரராக பணிபுரிந்த கந்தசாமி காரைக்குடி பின்தொடர்தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த சுந்தரராஜன் சிங்கம்புணரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.
மானாமதுரை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் மதுரை சுற்றுச்சாலை அலகின் தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த தனலட்சுமி மானாமதுரை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.

சமூக பாதுகாப்பு

திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாரராக பணிபுரிந்த உ மா சிவகங்கை தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இங்கு பணிபுரிந்த கண்ணதாசன் திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.
சிங்கம்புணரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக பணிபுரிந்த செல்வராணி சிவகங்கை கேபிள் டி.வி. உதவி மேலாளராக மாற்றப்பட்டார்.ஏற்கனவே அங்கு இருந்த மங்கையர்திலகம் சிவகங்கை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.
சிவகங்கையில் குடிமைப்பொருள் தனி தாசில்தாரராக பணிபுரிந்த மைலாவதி திருப்புவனம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இருந்த உமா மகேஸ்வரி தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.

காளையார்கோவில்

காளையார்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரர் கண்ணன் தேவகோட்டை சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த பாலகுரு சிவகங்கை ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தாரராக நியமிக்கப்பட்டார்.
மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாரராக பணிபுரிந்த யாஸ்மின் சகர்பான், சிவகங்கை கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தாசில்தாரராக நியமிக்கப்பட்டார்.

Next Story