ரெயில்வே கேட் கீப்பர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்


ரெயில்வே கேட் கீப்பர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்
x
தினத்தந்தி 21 Aug 2021 11:20 PM IST (Updated: 21 Aug 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

திருவாருர்-காரைக்குடி மார்க்கத்தில் கேட் கீப்பர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் கூறினார்.

திருவாரூர்;
திருவாருர்-காரைக்குடி மார்க்கத்தில் கேட் கீப்பர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மணீஷ் அகர்வால் கூறினார்.
ரெயில் நிலையத்தில் ஆய்வு
திருவாரூர் ரெயில் நிலையத்தை திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ் அகர்வால் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், இரும்பு பாதை, பயண சீட்டு வழங்குமிடம், பயணிகள் ஓய்வு அறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி போன்ற வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.மேலும் நடைமேடையை ஒட்டியுள்ள மழைநீர் வடிகால் மேடை சேதமடைந்து இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மற்றும் மின்சார கேபிள்கள் உடனடியாக அகற்றி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
பேட்டி
பின்னர் ரெயில்வே ஊழியர்களிடம் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த வாரம் தான் பதவியேற்ற நிலையில் திருச்சி ரெயில்வே கோட்டத்தின் தேவைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். கடந்த கால பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். 
திருவாருர்-காரைக்குடி மார்க்கத்தில் ரெயில்வே கேட் கீப்பர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.. புதிய ரெயில் இயக்க வேண்டும் என திருவாரூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மனுக்கள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய ரெயில் தொடர்பாக அமைச்சரவை தான் முடிவெடுக்க வேண்டும். திருவாரூர்-ராமேஸ்வரம் மார்க்கத்தில் கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டவுடன் முழு வீச்சில் ரெயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ரெயில் கோட்ட இயக்குதல் முதுநிலை மேலாளர் ஹரிகுமார், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story