பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
தளி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
பஞ்சலிங்க அருவி
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.
வனப்பகுதியில் மழை பெய்யும் போது ஆறுகளில் நீர் வரத்து ஏற்படுகிறது. ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது. இதனால் அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுமார் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது.
மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் நறுமணத்தையும் அளிக்கிறது. இதனால் இதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.
நீராதாரங்களில் மழை
கொரோனா காரணமாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று திடீரென பஞ்சலிங்க அருவியின் நீராதாரங்களில் மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது.
அந்த தண்ணீர் அடிவார பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று சப்தகன்னிமார் கோவிலை சூழ்ந்தபடி சென்று திருமூர்த்தி அணையை அடைகிறது. அருவியில் தண்ணீர் அதிகரிப்பால் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில் உண்டியலை பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டியிருந்தனர். மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று மதியம் முதல் தளி, அமராவதி பகுதியில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவியது. வெப்பத்தின் தாக்குதல் குறைந்ததால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story