காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் பலத்த மழை


காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 21 Aug 2021 11:31 PM IST (Updated: 21 Aug 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

காரைக்குடி,

காரைக்குடி, திருப்பத்தூர் பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை

 காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் நேற்று காலை 10 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காரைக்குடி பகுதியில் காலை 11 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மதியம் 1 மணி வரை நீடித்தது.
2 மணி நேரம் பெய்த தொடர் மழையால் காரைக்குடி புதிய பஸ் நிலையம், 100 அடி சாலை, பெரியார்சிலை, செக்காலை சாலை, கல்லூரிச்சாலை, வாட்டர் டேங்க் பகுதி உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுதவிர காரைக்குடி முதல் மற்றும் 2-வது பீட் பகுதி, செஞ்சை பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதி, கழனிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக அந்த பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் காரைக்குடியை சுற்றியுள்ள ஸ்ரீராம் நகர், பாரி நகர், கோட்டையூர், ஓ.சிறுவயல் உள்ளிட்ட பகுதியிலும் நேற்று பரவலான மழை பெய்தது. இதேபோல் திருப்பத்தூர் அதன் சுற்றியுள்ள கோட்டையிருப்பு, நாட்டார்மங்கலம், மாங்குடி, திருக்காளப்பட்டி, கண்டரமாணிக்கம், நெடுமரம் உள்ளிட்ட பகுதியில் நேற்று பலத்த மழை பெய்ததால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் நேற்று மாலை 4 மணியளவில் சிங்கம்புணரி, இளையான்குடி பகுதியில் மிதமான சாரல் மழை பெய்தது.

Related Tags :
Next Story