மாவட்டத்தில் பரவலாக மழை
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
அருப்புக்கோட்டை,
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
பலத்த மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே அருப்புக்கோட்டை பாலையம்பட்டி, ஆத்திபட்டி, சொக்கலிங்கபுரம், புளியம்பட்டி, ராமசாமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நேற்று அதிகாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
குமரன் புதுத்தெரு, காந்தி மைதானம், டெலிபோன் ரோடு, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீரோடு கலந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆடிப்பட்டத்தில் நிலத்தை உழுது மழைக்காக காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
சிவகாசி பகுதியில் நேற்று 2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதேபோல ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
Related Tags :
Next Story