சி.ஐ.டி.யூ. கண்டன ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ. கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Aug 2021 11:56 PM IST (Updated: 21 Aug 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

சி.ஐ.டி.யூ. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம், 
மத்திய அரசு நாளுக்குநாள் உயர்த்தி வரும் சமையல் எரிவாயு விலையை உடனடியாக வாபஸ்பெற வலியுறுத்தி ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ.தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட செயலாளர் சிவாஜி, காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளை செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், மாவட்ட தலைவர் அய்யாத்துரை, மாவட்ட துணைத்தலைவர் சுடலைகாசி, துணை செயலாளர் மலைராஜன், ஆட்டோ சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் ரமேஷ், பஞ்சாலை சங்க மாவட்ட செயலாளர் வெங்கடசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆட்டோ சங்க தலைவர் மாரிந்திரன் நன்றி கூறினார்.

Next Story