லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் உற்சவம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் உற்சவம்
x
தினத்தந்தி 22 Aug 2021 12:00 AM IST (Updated: 22 Aug 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்த ஆண்டாள் உற்சவத்தில் கேடயத்தில் எழுந்தருளி ஆண்டாள் அருள்பாலித்தார்.

சோளிங்கர்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்த ஆண்டாள் உற்சவத்தில் கேடயத்தில் எழுந்தருளி ஆண்டாள் அருள்பாலித்தார். 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள லட்சுமிநரசிம்மர் கோவிலில் ஆண்டாள் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆண்டாள் ‌சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. மாலை ஆண்டாள் சாமிக்கு‌ சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தங்க கேடயத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்களுடன்‌ வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.

ஆண்டாள் உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயா, கண்காணிப்பாளர் விஜயன் ஆகியோர்  செய்திருந்தனர்.

Next Story