சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா


சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 22 Aug 2021 12:03 AM IST (Updated: 22 Aug 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

பனைக்குளம், 
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய தேர்போகி பகுதியில் சித்தி விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீதேவி வில்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக  யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ரெகுநாதபுரம் சேஷய்யங்கார், தெய்வச்சிலை ஐய்யங்கார் மற்றும் திருநெல்வேலி முருகானந்த சிவாச்சாரியார் தலைமையிலான வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடந்தது. விழாவில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு மண்டபம் ஒன்றிய துணைத்தலைவர் பகவதி லெட்சுமி முத்துக்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. செய்தி தொடர்பு துணை செயலாளர் ராஜீவ்காந்தி, மண்டபம் ஒன்றிய தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம், மண்டபம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், ராமநாதபுரம் தெற்கு நகர் தி.மு.க. பொறுப்பாளர் பிரவீன் தங்கம், ஊராட்சி தலைவர்கள் மோகன் குமார், மீரான் ஒலி, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம தலைவர் வீரபத்திரன், மண்டபம் ஒன்றிய துணை தலைவர் பகவதி லெட்சுமி முத்துக்குமார், அகில இந்திய மறவர் அறக்கட்டளை நிறுவன தலைவர் முருகேசன், கிராம துணை தலைவர் அரியமுத்து, இளைஞர் நற்பணி மன்ற தலைவர் அங்காளேஸ்வரன், பூசாரி காளிமுத்து, ஈஸ்வரன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story