கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2021 12:06 AM IST (Updated: 22 Aug 2021 12:06 AM IST)
t-max-icont-min-icon

கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் பராசக்தி (வயது 24). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற ராஜேஸ்வரன் (26) என்பவரின் உறவினரான உத்திரமூர்த்தி என்பவர் தகராறு செய்துள்ளார். அதனால் பராசக்தி முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்திரமூர்த்தியை கைது செய்தனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று பராசக்தி அவரது வீட்டின் முன்பு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது குமார், பராசக்தியை வழிமறித்து உத்திரமூர்த்தி சிறையில் இருப்பதற்கு நீ தான் காரணம், என்று கூறி அவதூறாக பேசினார். பின்னர் அரிவாளால் தாக்க முயன்று, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் போல் முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தார்.

Next Story