2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 22 Aug 2021 12:20 AM IST (Updated: 22 Aug 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
பணகுடி அருகே 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

2 வாலிபர்கள்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் எல்கான்தாசன் (வயது 28), பணகுடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சவரி வளன் (20). இவர்கள் மீது பணகுடி போலீஸ் நிலையத்தில் கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜார்ஜ் சகாய சாந்தி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று எல்கான்தாசன், சவரிவளன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

குண்டர் சட்டம்

இதைத்தொடர்ந்து எல்கான்தாசன், சவரிவளன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம், இன்ஸ்பெக்டர் அருள்ஜார்ஜ் சகாய சாந்தி வழங்கினார்.

Next Story