சிவாச்சாரியார்கள் பாராயணம்


சிவாச்சாரியார்கள் பாராயணம்
x
தினத்தந்தி 22 Aug 2021 12:23 AM IST (Updated: 22 Aug 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளையார்பட்டியில் சிவாச்சாரியார்கள் பாராயணம் செய்தனர்.

திருப்பத்தூர்,

தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் புதிய அர்ச்சகர்களை நியமித்தது. இந்த நிலையில் பிள்ளையார்பட்டி வேதபாடசாலையில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நேற்று பாராயணம் நடத்தினர். பாராயணத்தில் சிவாச்சாரியார்கள், வேதபாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் பேசும் போது, தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்து இருப்பது சிவாச்சாரியார்களின் வாழ்வாதாரத்தை பாதித்து உள்ளது. எனவே இந்த முடிவை பரிசீலிக்க வேண்டும். சிவாச்சாரியார் நினைத்த காரியம் கைகூட கற்பக விநாயகரிடம் 1008 மந்திர பாராயணம் பாடப்பட்டது என்றார்.


Next Story