மழை நீர் செல்லும் வாருகால் இடித்து அகற்றம்
ராமேசுவரத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக மழை நீர் செல்லும் வாருகால் இடித்து அகற்றப்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக மழை நீர் செல்லும் வாருகால் இடித்து அகற்றப்பட்டது.
அகலப்படுத்தும் பணி
ராமநாதபுரம்-ராமேசுவரத்துக்கு இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலை 10 மீட்டர் அகலத்தில் இருந்து வருகின்றது. அதுபோல் ராமநாதபுரம்-ராமேசுவரம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பாக விபத்து ஏற்பட கூடிய இடம், ஆபத்தான வளைவு உள்ளிட்ட முக்கியமான இடங்கள் மட்டும் கணக்கிடப்பட்டு அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் சாலை இருபுறமும் 4.8 மீட்டர் அகலத்தில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல் ராமேசுவரம் தாலுகா அலுவலகம் அருகில் இருந்து லட்சுமண தீர்த்தம் வரையிலும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தற்போது உள்ள இந்த 10 மீட்டர் அகலத்தில் ஆன சாலையை மேலும் இருபுறமும் 9 மீட்டருக்கு அகலப்படுத்தும் பணி தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ராமேசுவரம் பஸ்நிலையம் முதல் லட்சு மண தீர்த்தம் வரையிலும் தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராமேசுவரம் நகரில் சாலையின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் அரசு ஒதுக்கிய பலகோடி ரூபாய் நிதியில் மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட வாருகால் ஜே.சி.பி. எந்திரம் மூலம் உடைக்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.
கோரிக்கை
அரசு ஒதுக்கும் பணத்தை சரியான ஒரு திட்டமிடல் இல்லாமல் பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் வாருகால் அமைத்து அரசு பணத்தை விரயமாக்கும் இது போன்று செயல்படும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதோடு அரசு ஒதுக்கும் நிதியை மக்களுக்கு போக்குவரத்திற்கு பயனுள்ள வகையில் சரியாக திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்ய முன்வரவேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story