இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது


இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2021 12:33 AM IST (Updated: 22 Aug 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளத்தில் இருதரப்பினர் மோதலில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடங்குளம்:

கூடங்குளம் கிழக்கு பஜாரில் உள்ள கோவிலில் பூஜை நடத்துவது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலையில் அவர்கள் கோவிலில் வழிபட சென்றபோது, அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.

இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த துரைச்சாமி, சுயம்பு, விஜயகுமாரி, வானதி ஆகியோரும், மற்றொரு தரப்பில் பாண்டி, தில்லைக்கனி, பிரேமலட்சுமி ஆகியோரும் காயமடைந்தனர். அவர்கள் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து துரைச்சாமி அளித்த புகாரின்பேரில், சுந்தர், சீலா, நெதர்சன், ரவிராஜ் உள்பட 22 பேர் மீதும், பாண்டி அளித்த புகாரின்பேரில், அலெக்ஸ் பாண்டியன், ரவிகுமார், கண்ணபெருமாள், நரேஷ்குமார், விஜய் உள்பட 25 பேர் மீதும் கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சுந்தர், அலெக்ஸ் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story