வீட்டின் பீரோவை உடைத்து 5½ பவுன் நகைகள்-பணம் திருட்டு


வீட்டின் பீரோவை உடைத்து 5½ பவுன் நகைகள்-பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 Aug 2021 1:46 AM IST (Updated: 22 Aug 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

வல்லத்தில் வீட்டின் பீேராவை உடைத்து 5½ பவுன்நகைகள்-பணம் ஆகியவற்்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வல்லம்:
வல்லத்தில் வீட்டின் பீேராவை உடைத்து 5½ பவுன்நகைகள்-பணம் ஆகியவற்்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 
கொடைக்கானலுக்கு சுற்றுலா
தஞ்சையை அடுத்துள்ள வல்லம் நல்லதண்ணீர் கிணறு ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் அங்குள்ள ஒரு வீட்டில் முதல் மாடியில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெங்கடேஷ்(வயது24) தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சுற்றுலா சென்றுவிட்டு வல்லத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். அப்போது  4 மர்மநபர்கள் வீட்டின் பின்புறமாக வெளியில் ஏறி குதித்து தப்பி ஓடினர். 
5½ பவுன் நகைகள்- பணம் திருட்டு 
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றுபார்த்தார். அங்கு வீட்டில் இருந்த பீரோவை மர்மநபர்கள் உடைத்து அதில் இருந்த 5½ பவுன்  நகைகள், விலை உயர்ந்த கேமரா மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்ததும்  வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வெங்கடேஷ்  கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story