ராமநகரில் 77 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு; ஓட்டல் அதிபருக்கு ரூ.982 கோடி அபராதம் விதித்தது சரியே - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
ராமநகரில் அரசு நிலம் 77 ஏக்கரை ஆக்கிரமித்த ஓட்டல் அதிபருக்கு ரூ.982 அபராதம் விதித்தது சரியே என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
ரூ.982 கோடி அபராதம்
ராமநகர் மாவட்டம் பிடதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டல் கடந்த 1996-ம் ஆண்டு 400 ஏக்கர் நிலத்தை வாங்கி ரெசார்ட் ஓட்டல் அமைந்திருந்தது. அவ்வாறு ஓட்டல் கட்டியதில் 77 ஏக்கர் அரசு நிலம் என்பது தெரியவந்தது. அந்த நிலத்தை ஆக்கிரமித்து ஓட்டல் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு 77 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததற்காக அந்த ஓட்டலுக்கு அரசு ரூ.982 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் அந்த நிலத்தின் மதிப்பு ரூ.12.35 கோடி தான் என்று ஓட்டல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் ரூ.12.35 கோடியை மட்டுமே ராமநகர் மாவட்ட நிர்வாகத்திடம், ஓட்டல் நிர்வாகம் வழங்கி இருந்தது. இதையடுத்து, மீதிபணத்தை செலுத்தும்படி ஓட்டல் நிர்வாகத்திற்கு அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஓட்டல் அதிபர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அரசின் முடிவு சரியானது
இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி நரேந்தர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அப்போது ஓட்டல் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.12.35 கோடி மட்டுமே. அதன் அடிப்படையில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு ரூ.982 கோடி அபராதம் விதித்திருப்பது சரியல்ல. அரசின் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நரேந்தர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து ஓட்டல் கட்டப்பட்டுள்ளது. வணகத்திற்காக அந்த நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அரசு ரூ.982 கோடி அபராதம் விதித்திருக்கிறது. அரசு நிலத்தை ஆக்கிரமித்து வணிக நடவடிக்கைக்கு பயன்படுத்துவது சரியல்ல. அரசு விதித்த அபராதம் சரியானது. அந்த அபராதத்தை கட்ட வேண்டும். அரசு நிலத்தை ஆக்கிரமித்தது குறித்து உரிய விளக்கம் அளிக்கவும் சம்பந்தப்பட்ட ஓட்டல் அதிபருக்கு நோட்டீசு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story