பெங்களூரு-ஹாசன் இடையே தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
பெங்களூரு - ஹாசன் இடையே தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பெங்களூரு:
சுங்க கட்டணம் உயர்வு
பெங்களூரு, துமகூரு, ஹாசன், சிவமொக்கா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா மற்றும் பெல்லூரு கிராசில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த 2 சுங்கச்சாவடி வழியாக பெங்களூருவில் இருந்து ஹாசனுக்கு செல்லும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நெலமங்களாவில் இருந்து ஹாசனுக்கு ஒரு முறை சென்றுவிட்டு, மீண்டும் வருவதற்கு கார்களுக்கு தற்போது ரூ.65 கட்டணம் உள்ளது. அது ரூ.70 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் இருந்து ஒரு முறை செல்வதற்கு ஏற்கனவே உள்ள ரூ.45 கட்டணமே வசூலிக்கப்படும்.
பஸ், லாரிகள்...
அதுபோல், கார்களுக்கான ஒரு மாதத்திற்கான கட்டணம் ரூ.40 உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, 1-ந் தேதி முதல் ரூ.1,390 கட்டணம் வசூலிக்கப்படும். அதுபோல், பஸ், லாரிகள் ஒரு முறை மட்டும் செல்வதற்கு சுங்க கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களுக்கான மாத கட்டணம் ரூ.140 உயர்த்தப்பட்டு, மாதத்திற்கு ரூ.4,865 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, இலகுரக சரக்கு வாகனங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story