பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை


பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை
x
தினத்தந்தி 22 Aug 2021 3:35 AM IST (Updated: 22 Aug 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

பெரம்பலூர்:

3 நாட்களுக்கு மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் உள்பட அனேக இடங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை, காலை 9.30 மணியளவில் பலத்த மழையாக மாறி சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்தது. பின்னர் விட்டு, விட்டு மழை தூறிக் கொண்டிருந்தது.
குளம்போல் தேங்கியது
இதனால் மழைநீர் சாலையில் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. காலை நேரத்தில் பெய்த மழையால் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். மேலும் பகல் நேரத்தில் வானம் கருமேகங்களுடன் காணப்பட்டது. கடந்த சில நாட்களாகவே பெய்து வரும் மழையால் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பாடாலூர்-18, வேப்பந்தட்டை-15, புதுவேட்டக்குடி-11, செட்டிகுளம்-2.

Related Tags :
Next Story