செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு


செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Aug 2021 4:38 PM IST (Updated: 22 Aug 2021 4:38 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குடும்ப கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது‌. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தொடர்ந்து அந்த வார்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை வேறு வார்டுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுப்பி வைத்தனர்‌.

கடந்த 2 நாட்களாக பெய்த லேசான மழையால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் மேற்கூரை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது. மேற்கூரை பெயர்ந்து விழுந்தது நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story