மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி


மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி
x
தினத்தந்தி 22 Aug 2021 4:53 PM IST (Updated: 22 Aug 2021 4:53 PM IST)
t-max-icont-min-icon

மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி

தளி
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள், அடிப்படை மற்றும் அவசரகால தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சமவெளிப் பகுதிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த சூழலில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நோய்தொற்று கட்டுக்குள் வந்ததால் அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆனாலும் மலைவாழ் மக்கள் சமவெளிப் பகுதிக்கு வந்து செல்லமுடியாதலால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து மேல்குருமலை மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல் கலந்துகொண்டு மலைவாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கினார். மேலும் வெளி நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறை, நக்சல்தடுப்பு மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. அப்போது நக்சல் தடுப்பு இன்ஸ்பெக்டர் ரவி, சப்இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி, சரவணக்குமார் உள்ளிட்ட வனத்துறையினர், போலீசார் உடனிருந்தனர்.

---
Image1 File Name : 5807021.jpg
----
Reporter : L. Radhakrishnan  Location : Tirupur - Udumalaipet - Thali

Next Story