கொட்டி தீர்த்த மழை
தாராபுரத்தில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தாராபுரம்
தாராபுரத்தில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழை
தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளான அலங்கியம், தளவாய்பட்டணம், கொளத்துப்பாளையம், உட்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதுபோன்று நேற்று மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தது.
அதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன.பின்னர் 2.30 மணியளவில் லேசான காற்று மற்றும் தூரலுடன் ஆரம்பமான மழை நேரம் செல்ல செல்ல பலமாக பெய்யத்தொடங்கியது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்த கனமழையால் தாராபுரம் பஸ்நிலையம், பொள்ளாச்சி ரோடு, கடைவீதி உட்பட பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவு நீர் மழை நீரோடு கலந்து சாலையில் ஓடியது.சாலை ஓரங்களிலும், வயல்வெளிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.
விவசாயிகள் மகிழ்ச்சி
மேலும் பைபாஸ்ரோடு, தாலுகா அலுவலகம், 5 கார்னர் உட்பட பல முக்கிய சாலைகளில் வெள்ளம் பாய்ந்து ஓடியது. மதியம் தொடங்கி இரவு வரை விட்டு விட்டு பெய்த மழையால் அப்பகுதியில் நிலவி வந்த வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவியது.
மேலும் இந்த மழையால் விவசாய பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான புற்கள் செழித்து வளர வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
Related Tags :
Next Story