வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகை திருடிய பெண்கள்
திருவல்லிக்கேணியில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகை திருடிய பெண்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி பக்கீர் சாகிப் தெருவை சேர்ந்தவர் கோவிந்த்ராம் (வயது 42). இவர், அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் 2 பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து 14 கிராம் தங்க நகைகளை திருடி சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக கோவிந்த்ராம், ஜாம்பஜார் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நகையை பெண்கள் நைசாக திருடிச்செல்லும் கண்காணிப்பு கேமரா பதிவையும் போலீசாரிடம் அளித்தார்.
அதன்பேரில் ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகைகளை திருடிய 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story