கொரோனா பரிசோதனை


கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 22 Aug 2021 5:06 PM IST (Updated: 22 Aug 2021 5:06 PM IST)
t-max-icont-min-icon

சந்தைக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை

திருப்பூர்
திருப்பூர் பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு வருகிற பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் மற்ற நாட்களை விட விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்கு அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் வரும். தற்போது கொரோனா பரவலின் காரணமாக சந்தைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு அருகே பலரும் பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இந்த பொருட்களை பலரும் வாங்கி செல்கிறார்கள். 
இந்நிலையில் தென்னம்பாளையம் சந்தைக்கு நேற்று வந்த பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி சார்பில் ஏற்கனவே தற்காலிக கொரோனா பரிசோதனை மையம் ஒன்றும் சந்தை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் நேற்று கொரோனா பரிசோதனை வாகனங்கள் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதுபோல் சந்தைக்கு வந்த பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 


Next Story