கயத்தாறு அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை
கயத்தாறு அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாடசாமி. இவரது மகன் காளிராஜ் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தனது உறவினரான நெல்லை மாவட்டம் பருத்திகுளத்தை சேர்ந்த மகாலட்சுமி (25) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர் அடிக்கடி மதுகுடித்து வந்ததால் வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. நேற்று வயிற்றுவலி தாங்காமல் தனது தோட்டத்தில் பம்புசெட் மோட்டார்கிணற்றில் இருந்த மருந்தை எடுத்து மதுவில் கலந்து குடித்து விட்டு வீட்டிற்கு வந்து படுத்துக்கொண்டாராம். வெகு நேரமாகியும் அவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை. குடும்பத்தினர் அவரைப் புரட்டிப் பார்த்தபோது இறந்த நிலையில் கிடந்தார்.
இதுகுறித்து கயத்தாறு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story