திருவள்ளூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் இந்து முன்னணியினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மலை மீது அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் வினோத் கண்ணா தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக விசுவ இந்து பரிஷத்தின் மாநில துணை தலைவர் நடராஜன், இந்து முன்னணியின் மாநில நிர்வாகிகள் மலையம் சம்பத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பூந்தமல்லி அடுத்த குமணன் சாவடியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்துகொண்டு அச்சரப்பாக்கம் மலையின் மீது அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story