சாத்தான்குளம் பகுதியில் வைக்கோல் விலை வீழ்ச்சி
சாத்தான்குளம் பகுதியில் வைக்கோல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் பகுதியில் பயிரிடப்பட்ட நெல் பயிரில் தற்போது அறுவடை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வைக்கோலை கட்டுக்கு ரூ.150 வீதம் விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.
நெல் அறுவடை செய்யப்பட்டு வைக்கோல் கட்டுகள் ஏராளமாக வயலில் கட்டி வைக்கப்பட்டு உள்ளன. வைக்கோல் அதிகளவில் இருப்பதால், ஒரு கட்டு வைக்கோல் விலை ரூ.50 முதல் ரூ.60 வரை விலையில் வியாபாரிகள் வாங்க வருகின்றனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் வைக்கோல் கட்டுகளை விற்பனை செய்யாமல் அப்படியே வயலில் போட்டு உள்ளார்கள். மேலும் வைக்கோல் விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story