ஆண்டிப்பட்டி அருகே பாண்டி முனீஸ்வரர் கோவிலில் சக்தி பூஜை


ஆண்டிப்பட்டி அருகே பாண்டி முனீஸ்வரர் கோவிலில் சக்தி பூஜை
x
தினத்தந்தி 22 Aug 2021 9:15 PM IST (Updated: 22 Aug 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே பாண்டி முனீஸ்வரர் கோவிலில் சக்தி பூஜை நடந்தது.

ஆண்டிப்பட்டி :
ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டிக்கு மேல்புறம் பாண்டி முனீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், ஆச்சி கிழவி ஒச்சாயி, சின்னன், மாயன், காளீஸ்வரி ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. இக்கோவிலில் சக்தி பூஜை திருவிழா நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கியது. அப்போது காப்புக்கட்டி 15 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் கிடா வெட்டி ஆகாச கருப்புக்கு படையலிட்டனர். தொடர்ந்து 5 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு மற்றும் கிடா வெட்டி அசைவ விருந்து பரிமாறுதல் ஆகியவை நடக்கிறது. தேனி மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். 
விழாவை முன்னிட்டு பிச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story