விபத்தில் நிதி நிறுவன உரிமையாளர் பலி
ஊத்துக்குளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் நிதி நிறுவன உரிமையாளர் பலியானார்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் நிதி நிறுவன உரிமையாளர் பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
நிதி நிறுவன உரிமையாளர்
ஈரோடு மாவட்டம் சோலார், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி வயது 60. அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் ஈரோட்டில் இருந்து கோவை சென்றார். பின்னர் கோவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவையிலிருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி பகுதி அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அவருக்கு பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார், பொன்னுச்சாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பொன்னுசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பலி
உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் விரைந்து வந்து பொன்னுச்சாமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----
Related Tags :
Next Story