பிளஸ் 1 மாணவியை கடத்தி பலாத்காரம்


பிளஸ் 1 மாணவியை கடத்தி  பலாத்காரம்
x
தினத்தந்தி 22 Aug 2021 10:25 PM IST (Updated: 22 Aug 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த 10-ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான்.

பொள்ளாச்சி

ஆனைமலை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த 10-ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான். 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-1 மாணவி மாயம் 

ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்த நிலையில் அந்த மாணவியை திடீரென்று காணவில்லை. இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

கடத்தி சென்று பலாத்காரம் 

இது குறித்து பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவன், அந்த மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

தொடர்ந்து போலீசார் 2 பேரையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். இது பாலாத்கார சம்பவம் என்பதால் இந்த வழக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

போக்சோவில் மாணவன் கைது 

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். 

பின்னர் அவர் கோவையில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப் பட்டார். அந்த மாணவி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். 


Next Story