நெகமம் காட்டன் சேலை விற்பனை குறைந்தது


நெகமம் காட்டன் சேலை விற்பனை குறைந்தது
x
தினத்தந்தி 22 Aug 2021 10:31 PM IST (Updated: 22 Aug 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஓணம் பண்டிகையையொட்டி நெகமம் காட்டன் சேலை விற்பனை குறைந்தது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

நெகமம்

ஓணம் பண்டிகையையொட்டி நெகமம் காட்டன் சேலை விற்பனை குறைந்தது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் கவலையடைந்து உள்ளனர். 

நெகமம் காட்டன் சேலைகள் 

நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் வீடுகளில் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்து வருகிறார்கள். 

எனவே இங்கிருந்து பிறமாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமல்லா மல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் காட்டன் சேலை கள் உற்பத்தி செய்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். 

விற்பனை குறைந்தது 

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஓணம் சேலை கள் விற்பனை பெரிதும் குறைந்து உள்ளது. இதன் காரணமாக கைத்தறி நெசவாளர்கள் கவலையடைந்து உள்ளனர். 

இது குறித்து நெசவாளர்கள் கூறியதாவது:-

ஓணம் பண்டிகையையொட்டி ஓணம் காட்டன் சேலைகள் என்று பிரத்யேகமாக தயாரித்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப் படும். அதுபோன்று அரேபிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படும். 

ஆனால் கொரோனா காரணமாக கேரளாவில் பல பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கவில்லை. குறிப்பாக திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே ஜவுளி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

நூல்விலை உயர்வு 

இதன் காரணமாக சேலைகள் விற்பனை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே இருந்தன. பல இடங்களில் விற்பனையும் முடங்கியது. இதன் காரணமாக வழக்கமாக அனுப்பி வைக்கப் படும் சேலைகளில் இந்த ஆண்டு 25 சதவீதம் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டது.  

மேலும் தற்போது நூல்விலையும் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ நூல் ரூ.600 ஆக இருந்தது தற்போது ரூ.750 ஆக உயர்ந்து உள்ளது. நூல்விலை உயர்வு, கொரோனா தாக்கம் ஆகியவை காரணமாக பலர் காட்டன் சேலையை உற்பத்தி செய்வதில் சுணக்கம் காட்டி வருகிறார்கள். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story