அரசு பள்ளியில் அரங்கேறும் சமூக விரோத செயல்கள்
நெகமம் அருகே செல்லாண்டிகவுண்டன்புதூர் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இருந்தும் கேட் இல்லாததால் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது.
நெகமம்
நெகமம் அருகே செல்லாண்டிகவுண்டன்புதூர் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் இருந்தும் கேட் இல்லாததால் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது.
அரசு பள்ளி
நெகமம் அருகே செல்லாண்டிகவுண்டன்புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் செல்லாண்டிகவுண்டன் புதூர் மற்றும் தேவம்பாடி ஊராட்சியை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக தற்போது இந்த பள்ளி மூடி இருக்கிறது. இந்த பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவி களின் நலன் கருதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் கேட் அமைக்கப்படவில்லை.
சமூக விரோத செயல்கள்
தற்போது பள்ளி மூடப்பட்டு உள்ளதால், பகல் நேரத்தில் அங்கு சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவர்கள் பள்ளி வளாகத்துக்குள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பள்ளி வளாகத்துக்குள் தினமும் இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் செல்கிறார்கள். இதனால் அங்கு தினமும் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. இது குறித்து கேட்டால் தகராறு செய்கிறார்கள்.
தடுக்க வேண்டும்
வருகிற 1-ந் தேதி முதல் 9 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே 1-ம் வகுப்பு மாணவர் களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே அரசு பள்ளியில் சமூக விரோதிகள் நுழைந்து வருவதால் அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் அடிப்படை வசதிகளை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே போலீசார் ரோந்து சென்று மர்ம நபர்கள் பள்ளி வளாகத்துக்குள் நுழைவதை தடுக்க வேண்டும். அத்துடன் இங்கு கேட் அமைக்க கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story