வந்தவாசியில் இருண்டு கிடக்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடம்
வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மின்விளக்கு வசதியின்றி இரவில் இருண்டு கிடக்கிறது. இங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தவாசி
வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மின்விளக்கு வசதியின்றி இரவில் இருண்டு கிடக்கிறது. இங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒழுங்குமுறை விற்பனை கூடம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. நெல் மற்றும் தானிய வரத்து அதிகமானதால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தரம் பிரித்து வகைப்படுத்தி எடை மற்றும் சிப்பமிடும் எந்திரம் உள்ளடக்கிய இரண்டு குடோன்கள் கடந்த 2018-ம் ஆண்டு சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இங்கு வந்தவாசியை சுற்றியுள்ள பகுதிகளான வங்காரம், ஆவணவாடி, மாம்பட்டு, கீழ் சாத்தமங்கலம், செம்பூர், அத்திப்பாக்கம், சேத்துப்பட்டு, தெள்ளூர், சென்னாவரம், பாதிரி உள்ளிட்ட 15 கிராமங்களிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், மணிலா உள்ளிட்ட உணவு தானியங்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
மாலை மற்றும் இரவு நேரங்களிலும் விவசாயிகள்
தங்கள் விளைபொருட்களை இந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வருகின்றனர்.
உயர்கோபுர மின்விளக்கு
ஆனால் இங்கு மின்விளக்கி வசதிகள் செய்யப்படாததால் இரவு நேரங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இருண்டு கிடக்கிறது. இந்த பகுதியில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் உள்ளதால் விவசாயிகளும், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளிகளும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், முகப்புப் பகுதியை தவிர மற்ற பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படாததால் சமூகவிரோதிகள் இந்த வளாகத்தை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் மதுபாட்டில்கள் உடைந்த நிலையில் கிடக்கின்றன.
எனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைத்துத்தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
Related Tags :
Next Story