பூணூல் மாற்றும் நிகழ்ச்சி


பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 Aug 2021 10:55 PM IST (Updated: 22 Aug 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

கோவை

ஆவணி மாத பவுர்ணமியையொட்டி வரும் அவிட்டம் நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே ஆவணி அவிட்டம் அன்று பழைய பூணூலை கழற்றி விட்டு புதிய பூணூல் அணிவார்கள். 

கணபதி பூஜையுடன் தொடங்கும் இந்த விரதம், புண்யாவாகனம் செய்த பின்னர் பஞ்சகவயம் அருந்தி உடல், மனம் மற்றும் இருப்பிடத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

கோவை ராம்நகரில் உள்ள தனியார் மகாலில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், ஒவ்வொரு முறையும் 30 பேர் மட்டும் அனுமதிக்கப்பட் டனர். 


Next Story