மாவட்டத்தில் மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று மேலும் ஒருவர் பலி
மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒருவர் பலியானார்.
புதுக்கோட்டை:
ஒருவர் பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 870 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 42 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 159 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு 331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் புதிதாக 19 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14 பேர் இறந்துள்ள நிலையில், 621 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story