திருப்பத்தூர் கோவில் கோபுரத்தில் இடி தாக்கி சிற்பங்கள் சேதம்
கோவில் கோபுரத்தில் இடி தாக்கி சிற்பங்கள் சேதம்
திருப்பத்தூர்
திருப்பத்தூரை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை செய்தது. அப்போது திருப்பத்தூர் டவுன் 32-வது வார்டு திருமால் நகர் குள்ளாசாரி வட்டம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் கோபுரத்தில் இடி விழுந்தது. இதில் சிற்பங்களின் தலை, மற்றும் கை, கால்கள், உடைந்து சேதமடைந்தன. மேலும் அந்தக் கோவிலை சுற்றியுள்ள பல்வேறு வீடுகளில் உள்ள டி.வி. உள்பட 50-க்கும் மேற்பட்ட மின் சாதனங்கள் பழுதடைந்துள்ளது. இடி விழுந்ததால் கோவில் மூடப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில் முத்துமாரி கோவில் கோபுரத்தின் மீது இடி விழுந்ததால் சேதமடைந்த சிலைகளை சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்துதான், கோவிலை திறக்க முடியும் எனக் கூறினார்கள்.
Related Tags :
Next Story