கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 22 Aug 2021 11:38 PM IST (Updated: 22 Aug 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

இளையான்குடி,

இளையான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து இளையான்குடியில் 3-வது முறையாக தடுப்பூசி முகாமை நடத்தியது.. முகாமில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சாலைக்கிராமம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நுனான்  தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முகமது, அப்ரோஸ் மற்றும் செய்யது யுசுப் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story