சிமெண்டு ஆலை ஒப்பந்த தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிமெண்டு ஆலை ஒப்பந்த தொழிலாளி பலியானார்.
நொய்யல்,
சிமெண்டு ஆலை
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கவுசிக் (வயது 24). இவர் கரூர் மாவட்டம் மூலிமங்கலம் அருகே உள்ள டி.என்.பி.எல். சிமெண்டு தொழிற்சாலையில் கடந்த 2 மாதங்களாக ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் சிமெண்டு ஆலைக்கு செல்வதற்காக கவுசிக் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.
விபத்தில் பலி
சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புகளூர் பிரிவு சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கவுசிக் ஓட்டி ெசன்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கவுசிக்கை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கவுசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story