திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களில் 5,801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களில் 5,801 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
திருப்பத்தூர்
திருப்புத்தூர் மாவட்டத்திலுள்ள 208 ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. திருப்பத்தூர் அடுத்த தொக்கியம் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார். அப்போது திட்ட அலுவலர் செல்வராசு, தாசில்தார் சிவப்பிரகாசம். ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது கலெக்டர் கூறுகையில் பொது மக்களை ஒருங்கிணைக்கவும, அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு அளிக்கவும் சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு இந்த தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படுகிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இந்த முகாம் நடந்தது.
பொதுமக்கள், மாற்று திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் இல்லங்களுக்கு அருகிலேயே ஊராட்சி அலுவலகங்களில் இந்த மாதம் கடைசி வரைக்கும் செயல்படக்கூடிய இந்த தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளில் நடந்த இந்த சிறப்பு முகாமில் 3,806 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 1,995 பேருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story