சந்தன காப்பு அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார்


சந்தன காப்பு அலங்காரத்தில் சேவுகப்பெருமாள் அய்யனார்
x
தினத்தந்தி 22 Aug 2021 11:52 PM IST (Updated: 22 Aug 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சிங்கம்புணரி,

சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் உள்ள குலாலர் வம்சாவளி சிவாச்சாரியார்கள் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும்  நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலை தேவியர்களுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோவில் சன்னதி முன்பு பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கும்பம் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் மூலவர் சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூக இடைவெளி விட்டு ஒன்றன்பின் ஒன்றாக குலால சிவாச்சாரியார்கள் பூணூலை மாற்றி கொண்டனர்.



Next Story