ஆற்காடு அருகே 80 அடி ஆழகிணற்றில் கார் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி.
ஆற்காடு அருகே 80 அடி ஆழகிணற்றில் கார் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
ஆற்காடு
ஆற்காடு அருகே 80 அடி ஆழகிணற்றில் கார் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
நிலத்தை பார்க்க சென்றார்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு குட்டகார தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 45). சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். ஜெயபாலனுக்கு சொந்தமான நிலம் திமிரி அடுத்த நாராயணபுரம் பகுதியில் உள்ளது. அதனை பார்ப்பதற்காக நேற்று மதியம் ஜெயபால் ராணிப்பேட்டை மாந்தர்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (33) என்பவருடன் காரில் சென்றுள்ளார். தினேஷ் காரை ஓட்டிச் சென்றார்.
அப்போது கோபிநாத் கார் ஓட்ட கற்றுக் கொள்வதற்காக காரை ஓட்டியுள்ளார். அப்போது கார் நிலை தடுமாறி 80 அடி ஆழ விவசாய கிணற்றில் பாய்ந்துள்ளது. இதில் அவர்கள் இருவரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த ஆற்காடு தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கோபிநாத் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் கிணற்றில் இருந்து மீட்டனர்.
ஒருவர் பலி
ஆனால் கோபிநாத் இறந்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த தினேஷ் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story