தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்


தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 Aug 2021 12:03 AM IST (Updated: 23 Aug 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று குறைந்ததால் ஊரடங்கு தளர்வில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

காரைக்குடி,

கொரோனா தொற்று குறைந்ததால் ஊரடங்கு தளர்வில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நேற்று தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

தியேட்டர்கள் திறக்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாதம் முதல் வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து தற்போது படிப்படியாக கொரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து தியேட்டர்கள் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சார்பில் தியேட்டர்கள் திறக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 இதையடுத்து நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கு கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று(திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் 50 சதவீத இருக்கையுடன் தியேட்டர்கள் திறக்க உத்தரவிட்டு இருந்தார்.

கிருமிநாசினி தெளிப்பு

இதை தொடர்ந்து தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணி தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்திலும் தியேட்டர்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய பகுதியில் உள்ள தியேட்டர்களில் அதன் உரிமையாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 4 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இருக்கைகளில் ஏதேனும் பழுது உள்ளதா என்றும், படம் ஒளிபரப்பு செய்யும் இடத்தில் தொழில் நுட்ப கோளாறு உள்ளதா? என்றும் ஊழியர்கள் ஆய்வு செய்து சரி செய்தனர். மேலும் இருக்கைகள், தியேட்டர் முகப்பு பகுதி, டிக்ெகட் கவுண்டர் பகுதி, கழிப்பறை பகுதி உள்ளிட்ட பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்து தயார் செய்யும் பணியும் நடைபெற்றது.

Next Story