பள்ளி, கல்லூரி திறக்க அரசு அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது-ஆசிரியர்-மாணவர்கள் பேட்டி
வருகிற 1-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரி திறக்க அரசு அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
காரைக்குடி,
வருகிற 1-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரி திறக்க அரசு அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆசிரியர், மாணவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்..
மாணவர்களின் வருகையை எதிர்பார்க்கிறோம்
கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் கடந்த 1½ ஆண்டு காலமாக வீட்டிலேயே இருந்து வருவதால் தனது சக நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்க்க முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் மன அழுத்தத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து, பள்ளி திறக்க அரசு அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏற்கனவே மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வருகை தந்து விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுக்கள் ஆகியவற்றை பெற்றுச்சென்று அவர்களும் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக உள்ளனர். பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்களின் வருகையை எதிர்நோக்கி வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றனர்.
மகிழ்ச்சி
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கல்லூரிக்கு சென்று பல மாதங்கள் கடந்த நிலையில் வீட்டில் ஆன்லைன் மூலம் பாடத்தை படிக்க வேண்டியது இருந்தது. இதனால் தினந்தோறும் செல்போன் பார்த்து, பார்த்து கண் எரிச்சல், கண் வலி ஏற்பட்டது. இதுதவிர என்னுடன் படித்த சக தோழிகளை பார்க்க முடியாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை இருந்தது. மீண்டும் கல்லூரிக்கு செல்ல தமிழக அரசு வாய்ப்பு அளித்ததால் தோழிகளை சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன். நேரில் சென்று பாடங்களை கற்பதால் எளிதில் புரிய வாய்ப்பு உள்ளது.
புதுவயலை சேர்ந்த பிரபாகரன் (10-ம் வகுப்பு மாணவர்):-
Related Tags :
Next Story