போக்குவரத்து விதிமீறல்; 793 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிமீறல்; 793 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Aug 2021 12:27 AM IST (Updated: 23 Aug 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.இவ்வாறு சிவப்பு விளக்கு எரியும்போது சிக்னலை கடந்து சென்றதாக 11 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்றதாக 52 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 8 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 452 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 193 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்ற 34 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 43 பேர் மீதும் என மொத்தம் 793 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.96 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டுள்ளது.

Next Story