குடியாத்தத்தில் சினிமா சண்டை பயிற்சியாளர் ஜூடோரத்தினம் வீட்டில் திருடியவர் கைது
குடியாத்தத்தில் சினிமா சண்டை பயிற்சியாளர் ஜூடோரத்தினம் வீட்டில் திருடிய பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் சினிமா சண்டை பயிற்சியாளர் ஜூடோரத்தினம் வீட்டில் திருடிய பழைய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
சினிமா சண்டை பயிற்சியாளர் வீட்டில் திருட்டு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பெரியப்ப முதலி தெருவில் பிரபல சினிமா சண்டை பயிற்சியாளர் ஜூடோரத்தினம் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சென்னைக்குச் சென்றிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வெள்ளிப் பொருட்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், பட்டுப்புடவைகள், பணம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜூடோரத்தினம் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலம்பரசன், சங்கரன், ஏட்டுகள் சந்திரபாபு, மோசஸ், பழனி, பிரவீன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
பழைய குற்றவாளி கைது
திருட்டு சம்பவம் நடைபெற்ற தினத்தன்று பதிவான செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பழைய குற்றவாளி செல்வராஜ் என்பவரின் செல்போன் எண் திருட்டு நடைபெற்ற ஜூடோரத்தினம் வீட்டின் அருகே உள்ள செல்போன் டவரில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் செல்வராஜை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் மறைந்திருந்த பழைய குற்றவாளியான குடியாத்தம் பிச்சனூர் சித்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story