மாரியூர் பள்ளியறை பூஜை


மாரியூர் பள்ளியறை பூஜை
x
தினத்தந்தி 23 Aug 2021 12:33 AM IST (Updated: 23 Aug 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே மாரியூர் கோவிலில் பள்ளியறை பூஜை நடந்தது.

சாயல்குடி,

சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தில் பவள நிற வள்ளி அம்மன் சமேத பூவேந்திய நாதர் கோவில் உள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து யாக சாலை பூஜையுடன் பள்ளியறை பூஜை நடந்தது. பவள நிற வள்ளி அம்மன், பூவேந்தியநாதர், விநாயகர்,  பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட பள்ளியறை பூஜை தற்போது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



Related Tags :
Next Story