பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்குடி,
இதேபோல் காரைக்குடி பகுதியில் பிராமணர்கள் சார்பில் செக்காலை பகுதியில் உள்ள சங்கர மடத்தில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா கட்சி முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் பிராமணர்கள் புதிய பூணூலை மாற்றிக்கொண்டனர்.
இதேபோல் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் சிவாசாரியார்கள் சார்பில் அங்குள்ள பாடக சாலையில் தலைமை குருக்கள் பிச்சைக்குருக்கள் தலைமையில் நேற்று அதிகாலை புதிய பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டனர். பிரான்மலை மங்கை பாகர் தேனம்மை கோவிலில் உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரசன்னா குருக்கள் தலைமையில் விஸ்வகர்ம சங்க உறுப்பினர்கள் பூணூல் மாற்றி கொண்டனர். சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.வி.மங்கலத்தில் உள்ள ருத்திரகோடீஸ்வரர் கோவில், திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பிராமணர்கள் ஆவணி அவிட்டத்தையொட்டி நேற்று புதிய பூணூலை மாற்றி கொண்டனர்.
Related Tags :
Next Story