விஷ வண்டுகள் அழிப்பு
அருப்புக்கோட்டையில் விஷ வண்டுகள் அழிக்கப்பட்டன.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ெரயில்வேபீடர் சாலையில் தனியாருக்கு சொந்தமான வாடகை குடியிருப்பின் மாடியில் விஷவண்டுகள் கூடுகட்டியிருப்பதாகவும், இந்த வண்டுகள் கடித்து பலர் காயமடைந்து வருவதாகவும் அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர் குடியிருப்பின் மேல் பகுதியில் கூடுகட்டியிருந்த விஷவண்டுகளை தீப்பந்தம் மூலம் முழுவதுமாக அழித்தனர். பல நாட்களாக அச்சுறுத்தி வந்த விஷவண்டுகள் முழுவதும் அழிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
Related Tags :
Next Story