மத்திய போலீஸ் படை சைக்கிள் ஊர்வலத்திற்கு வரவேற்பு


மத்திய போலீஸ் படை சைக்கிள் ஊர்வலத்திற்கு வரவேற்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 12:53 AM IST (Updated: 23 Aug 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் மத்திய போலீஸ் படை சைக்கிள் ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நெல்லை:
நெல்லையில் மத்திய போலீஸ் படை சைக்கிள் ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு

இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் சைக்கிள் ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர். இந்த ஊர்வலம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நேற்று தொடங்கியது. இதில் 36 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நேற்று மாலை நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தனர்.

அங்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் வழியனுப்புகிறார்

இதையடுத்து அவர்கள் ஆயுதப்படை வளாகத்தில் இரவு தங்கினர். இன்று (திங்கட்கிழமை) காலை அவர்களை கலெக்டர் விஷ்ணு, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் வழியனுப்பி வைக்கிறார்கள்.

இந்த படையினர் 2,850 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளில் டெல்லி ராஜ்கோட்டை அடைகிறார்கள்.

Next Story